தமிழகம்

24 அரியர்ஸ்.. முதல்வர் பழனிசாமி தான் கடவுள்.. நீங்க வேற லெவல் சார்.. திருச்சி மாணவனின் பரபரப்பு வீடியோ.!

Summary:

24 arriyars all pass trichy student video

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என முதல்வர் அறிவித்திருந்தார். அதேபோல் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது.

தற்போது அரியர்ஸ் அப்ளை செய்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை மீம்ஸ்கள் மூலம் வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 24 வயது இளைஞர் ஒருவருக்கு 24 அரியர்ஸ் இருந்த நிலையில் முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் சஞ்சய் கூறியதாவது:நான் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன். இதுவரை 30 பாடங்களுக்குத் தேர்வு எழுதி, 6 பாடங்களில் மட்டுமே தேர்ச்சிபெற்றிருந்தேன். 24 பாடங்களில் அரியர்ஸ் இருந்தது. படிக்க முடியாமல் நான்பெயில் ஆகவில்லை. கல்வி கற்பிக்கும் முறை பிடிக்காமல், நான் பெயிலாகினேன்.

10-ம் வகுப்பில் 427 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 905 மதிப்பெண்களும் எடுத்தேன். பொறியியல் படிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், அதனைகற்பிக்கும் முறை பிடிக்கவில்லை.இந்த சூழலில் கடந்த பருவத்தில் 24 பாடங்கள் அரியர்ஸ் எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தேன்.

தற்போது முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பால் நான் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். முதல்வர் பழனிசாமி தான் கடவுள். கண்டிப்பாக நான் 4 ஆம் ஆண்டில் படித்து நிச்சயம் பொறியாளர் ஆவேன் என்று முதல்வருக்கு நன்றி கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Advertisement