10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.! தாய் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.! தாய் எடுத்த அதிரடி நடவடிக்கை.!


22 yers old boy abused young girl

விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16-வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் அந்த இலங்கை அகதிகள்முகாமின் அருகிலுள்ள பாலவனத்தம் தெற்குப் பட்டியை சேர்ந்த அச்சப்பன் என்ற 22 வயது நிரம்பிய வாலிபர் அகதிகள் முகாமில் தங்கி படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி, ஆசை வார்த்தை காட்டி அச்சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்த தகவல் சிறுமியின் தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அச்சப்பனை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர்.