தமிழகம்

ஆசை வார்த்தை!! பலமுறை உல்லாசம்.. 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த இளைஞர் கைது

Summary:

12 ஆம் வகுப்பு மணாவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது

12 ஆம் வகுப்பு மணாவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சரத். 22 வயதாகும் சரத் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் சரத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து, மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் மாணவியுடன் மாயமாகியுள்ளார் சரத். இதனை அடுத்து பெரியபாளையம் அருகே உள்ள கோவில் ஒன்றில் வைத்து மாணவிக்கு தாலி காட்டியதோடு, அதே பகுதியில் வீடு ஒன்றை எடுத்து இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

இதில் பலமுறை அந்த மாணவியுடன் சரத் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் வீட்டில் இருந்து மாயமான சரத் அதன்பிறகு வீட்டிற்கே வரவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவி, இதுகுறித்து விசாரித்தபோது சரத்துக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் பேசிவருவதாக தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரத் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தனர்.

புகாரை அடுத்து போலீசார் சாரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.


Advertisement