தமிழகம் Covid-19

பெரும் சோகம்!! கண்கலங்கவைக்கும் தமிழக கொரோனா மரணங்கள்!! கடந்த 24 மணிநேரத்தில் எத்தனைபேர் மரணம், பாதிப்பு தெரியுமா?

Summary:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கடந்த ஒரே நாளில் 6,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்துவரும் அதேநேரத்தில் கொரோனா இறப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒரே நாளில் 241 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது 1,39,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 23,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 11,96,549 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement