கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மாமியார் கைது...



20 years young girl murder by her mother in law

சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்த கார்த்தீசுவரி(20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ஜோதிமணிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்‌. இந்நிலையில் கார்த்தீசுவரியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கார்த்தீசுவரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கும் அவரது மாமியார் சின்னத்தாயுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

sivakasi

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி கார்த்தீசுவரிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இச்சமயம் பயங்கர கோபமான  சின்னத்தாய் கர்ப்பிணி என்று கூட பாராமல் தனது மருமகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பலத்த தீக்காயத்துடன் சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

sivakasi

அதனையடுத்து போலீசார் சின்னத்தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.