கள்ளக்காதலுக்கு இடையூறு... காலை பிடித்து சுவற்றில் அடித்து பிஞ்சு குழந்தை கொலை... காதலன் மற்றும் தாய் கைது.!



2-year-old-kid-was-brutally-murdered-by-a-man-child-mot

சென்னையில் மாங்காடு அருகே கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் அவரது  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மாங்காடு பகுதியை அடுத்த கெருகம்பாக்கம் என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் லாவண்யா மற்றும் செல்வ பிரகாசம் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. கருத்து வேறுபாட்டால் செல்வ பிரகாசம் மற்றும் லாவண்யா பிரிந்து வாழ்ந்து வந்தனர். செல்வ பிரகாஷ் அவ்வப்போது சென்று தன் மகனை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் மகனை பார்ப்பதற்காக செல்வபிரகாசம் சென்றார் அப்போது லாவண்யா வீட்டில் இல்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் கேட்டபோது  அவரது மகன்  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

chennai

தன்மகன் இழந்ததை கூட தன்னிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் சந்தேகம் அடைந்த செல்வ பிரகாசம்  இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்கு பதிவு செய்தார். மேலும் ஆவடி கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்களது விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது . லாவண்யா கல்லூரியில் படிக்கும் போதே மணிகண்டன் என்ற நபருடன் காதலில் இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் அந்த உறவு தொடர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக  செல்வபிரகாசம் கண்டித்ததால் தான் அவர்களின் ஒரு குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பிரிந்து வந்த  லாவண்யா  மணிகண்டன் உடன் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் செல்வ பிரகாசம் மற்றும் லாவண்யா தம்பதியினரின் குழந்தை சிவனேசுவரன்  லாவண்யா மற்றும் மணிகண்டனின் காதலுக்கு இடையூறாக இருப்பதாக மணிகண்டன் நினைத்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி குழந்தையை கொடுமையும் செய்து இருக்கிறார். இந்நிலையில் குழந்தை சிவனேஸ்வரன் விளையாட்டாக மணிகண்டனின் செல்போனை தண்ணீரில் போட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் குழந்தையைப் பிடித்து சுவற்றில் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் குழந்தையின் தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் வலிப்பு ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. இதனை மறைப்பதற்காக குழந்தை தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாக நாடகம் ஆடி இருக்கின்றனர். தற்போது செல்வபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையின்  தீவிர விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.