தமிழகம்

18 வயசுதான் ஆகுது..! போனுக்கு ரீசார்ஜ் செய்ய பணம் தராததால் உயிரைவிட்ட மகன்..! கதறும் பெற்றோர்..!

Summary:

18 years old boy commit suicide for parents refused to recharge mobile

போனில் பப்ஜி கேம் விளையாடுவதற்கு செல்போனுக்கு பெற்றோர் ரீசார்ஜ் செய்து தராததால் மனமுடைந்த மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி டேனியல். கூலி தொழிலாளியான இவரது மகன் ஆன்றோ பெர்லின் (18). ஆன்றோ பெர்லின் நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்த ஆன்றோ பெர்லின் எப்போதும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிவந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நெட்பேக் முடிந்துவிட்டநிலையில் போனுக்கு ரீசார்ஜ் செய்ய தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், தந்தை பணம் தர மறுத்ததாகவும், தொடர்ந்து நச்சரித்ததால் செல்போனை உடைத்துவிடுவேன் என தந்தை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபித்துக்கொண்டு ஆன்றோ பெர்லின் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு முன்பும் பலமுறை ஆன்றோ பெர்லின் வீட்டிலிகோபித்துக்கொண்டு வெளியே செல்வதும், பின்னர் வீட்டிற்கு வருவதும் வழக்கம் என்பதால் இந்தமுறை பெற்றோர் அவனை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் ஆன்றோ பெர்லின் இந்த முறை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பதறியுள்ளனர், உடனே பல இடங்களில் தேடியும் பார்த்துள்ளனர். ஆனால் ஆன்றோ பெர்லின் பற்றி எந்த தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையே போலீசார் மற்றும் பெற்றோர் என பலரும் ஆன்றோ பெர்லினை தேடிவந்தநிலையில், நேற்று முன்தினம் தென்தாமரைகுளம் அருகே சவுக்குத்தோப்பு கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது ஆன்றோ பெர்லின் தான் என உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு வெளியே சென்ற ஆன்றோ பெர்லி, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சமப்வம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement