தமிழகம்

Breaking: தமிழகத்தில் 144 தடை..! அணைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு..!

Summary:

144 in tamilnadu up to march 31st due to corono

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. இந்தியாவிலும் இதுவரை 7 பேர் வைரஸ் பாதிபேர் உயிரிழந்துள்ளநிலையில், வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பால் கடை, காய்கறி கடை, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான, கடைகளை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement