ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. உறவினரின் உடந்தையால் அரங்கேறிய பெருங்கொடுமை.. பதறவைக்கும் சம்பவம்.!
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல் அம்பலமாகி இருக்கிறது.
Tiruvannamalai News: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி, தனது தாய்க்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருடன் துணையாக இருந்துள்ளார். சிறுமியின் தாய் வந்தவாசியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்று பின் மீண்டும் வருவது சிறுமிக்கு வழக்கம்.
உதவி செய்வதாக துரோகம்:
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதத்தில், அதே இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா (வயது 30), கணவரான லாரி ஓட்டுநர் இம்ரான் பாஷா (வயது 35), கிளீனர் அஜ்மல் பாஷா (வயது 30) ஆகியோரும் சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் நெருங்கி பேசிய பாத்திமா தன்வசப்படுத்தி முயற்சித்த நிலையில், சிறுமியும் பெங்களூரில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு., +2 மாணவி வன்கொடுமை கொலை.. பிரேத பரிசோதனையில் ஷாக் தகவல்.!
மக்கள் மீட்டனர்:
பாத்திமாவும் பெங்களூர் அழைத்துச் செல்வதாக சிறுமியை ஆற்காடு அழைத்துச் சென்றுள்ளார். பின் லாரியில் கணவர் இம்ரான், கிளீனர் பாஷா ஆகியோருடன் பெங்களூர் அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சிறுமியை ஓடும் லாரியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். பின் அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமியை மக்கள் மீட்டு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
அம்பலமான உண்மை & அதிரடி நடவடிக்கை:
சிறுமிக்கு கயவர்களின் கொடுமையால் வயிற்று வலி அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விடுதி காப்பாளர் பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. பின் தகவல் அறிந்த பெங்களூர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி, வழக்கை வந்தவாசிக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன்பேரில் சிறுமியிடம் விசாரணை நடந்து போக்ஸோவில் இம்ரான் பாஷா, அஜ்மல் பாஷா, பாத்திமா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி மீது வக்கிர எண்ணம்.. கட்டிப்போட்டு கொடூரம்.. சென்னையில் திக்., திக்.. பெண்களே உஷாரா இருங்க.!