அவங்க குடும்பத்தினருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்!! உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களில் இதுவரை 11 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையில் இதுவரை 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 2 அலை படு வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், பல ஆயிரம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக கொடூரமாகவே உள்ளது.
இந்நிலையில் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதேபோல் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம்வைத்து போராடி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்துவந்த மருத்துவர்களில் இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 260 மருத்துவர்கள் பலியான நிலையில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.