தமிழகம்

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மாடியிலிருந்து வீசி கொலை செய்த கொடூரன்!

Summary:

10 year old girl raped and killed in chennai

சென்னை மதுரவயலில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 3 ஆவது மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதரவாயல் மேட்டுக்குப்பத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு சிறுநீர் கழிக்க வெளியில் சென்ற அந்த குடும்பத்தின் 10 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியை வெளியில் விட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சிறுமியை 3 ஆவது மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்துள்ளார். இரவிலிருந்து சிறுமியை காணாததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த சிறுமி அவர்களது வீட்டின் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில் சந்தேதத்தின் பேரில் சுரேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சுரேஷை கைது செய்துள்ளனர் மதுரவாயல் போலீசார்.


Advertisement