தமிழகம்

கொரோனா பரவுவது இதனால்தானா? நிரூபித்தால் ஒரு கோடி! கடும் நஷ்டத்தால் கலங்கிய நிர்வாகிகளின் கோரிக்கை!

Summary:

1 crores prize for prove corono affected by chicken

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் இதுவரை கொரோனா வைரசால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனோவை  கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோழிக்கறியால் கொரோனா பரவுகிறது என தகவல்கள் தீயாய் பரவி வரும் நிலையில், கோழி வியாபாரம் மற்றும் முட்டை வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோழிப்பண்ணை சம்மேளன தலைவர் பேசுகையில், விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு எந்த ஒரு வைரஸ் தொற்றும் பரவாது. எந்த ஒரு ஆதாரமும் இன்றி இதுபோன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வீண் வதந்திகளால் கோழிப் பண்ணையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலை இன்னும் ஒரு வாரம் நீடித்தால் கோழிப்பண்ணைகள்  அழிந்துவிடும். எனவே தயவு செய்து இது போன்ற போலியான வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். மேலும் கோழியால் தான் கொரோனா  பரவுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு தருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வதந்தியால் இதுவரை 500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement