துளசி மாலை அணிய விருப்பமா? இந்த விஷயத்தை கவனிங்க பக்தர்களே.!
துளசி மாலை அணிவது ஆன்மீக நன்மையை ஏற்படுத்தும்.
நம்பிக்கை:
இந்து மதத்தின் மிகப்பெரிய புனித இடத்தை கொண்டுள்ள துளசி செடிக்கு, விஷ்ணு பிரியம் என்ற பெயரும் உண்டு. துளசி தண்டுகளால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிவது மன அமைதி, ஆன்மீக பயன் ஆகியவற்றை தரும் என என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதையும் படிங்க: வீட்டில் கட்டாயம் அகற்ற வேண்டிய பொருட்கள்.. புத்தாண்டுக்கு பின் இதை மறந்துடாதீங்க..!
விதிமுறைகள் உண்டு:
துளசி இருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்ககும். அதனை ஆபரணாக கருதாமல் ஆன்மீகமாக கருதினால் அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்கள், பெரியவர்களின் வாக்கு. துளசி மாலை அணியும்போது நாம் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் இருக்கின்றன.
இதுபோன்ற வார்த்தை கூடாது:
அதாவது, துளசி மாலை அணியும் நபர் தனது வாழ்க்கை முறையில் கட்டாயம் தூய்மை என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். எளிதில் செரிக்கும் எளிமையான உணவுகளை சாப்பிடலாம். பிறரை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்து கூடாது.

தூய்மை:
கடவுளின் நாமத்தை அடிக்கடி உச்சரிப்பது நல்லது. மாலை அணியும்போது மங்களகரமான நாட்களில் அணியலாம். ஒரு சில நேரங்களில் மாலையை நாம் பயன்படுத்த முடியாத சூழல் வந்தால், அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்தலாம். அதே போல, உடைந்த மாலை மற்றும் சேதமடைந்த நூல்கள் கொண்ட மாலைகளை பயன்படுத்த வேண்டாம்.
எந்த நாளில் அணியலாம்:
வியாழக்கிழமை ஏகாதசி, பௌர்ணமி போன்ற நாட்களில் துளசி மாலை அணிவிப்பது நல்லது. துளசி மாலை அணிந்ததால் ஆன்மீக பக்தி அதிகரிக்கிறது. இது வாழ்க்கையை தூய்மைப்படுத்தவும், சரியான முறையில் பயணிக்கவும் உதவுகிறது.