மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சொர்க்க வாழ்வை தரும், தை மாத சோமவார பிரதோஷ வழிபாடு.. பிறைசூடிய சிவன் பூஜை.!

தை மாத சோமவார பிரதோஷம்
தை மாதத்தில் சூரியனானது வட அரைக்கோள பகுதியில் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பப்படுகிறது. சிவன்குரிய வழிபாடுகளில் பிரதோஷம், மற்றும் சிவராத்திரி தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அந்த வகையில், தை 14ஆம் தேதி பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரம் திங்கள் கிழமை சோமவாரம் வருகின்றது. இந்த காலகட்டத்தில் சிவனை வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பான அருள் கிடைக்கும். திங்கள்கிழமையான நாளை தை, சோமவாரம் வருகின்றது.
பிறைசூடிய எம்பெருமான்
சந்திர திசை நடப்பவர்களும் சந்திரனை லக்ன அதிபதியாக கொண்டிருப்பவர்களும் கோவிலுக்கு சென்று பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனால், அவர்களது குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிறைசூடிய எம்பெருமானை இந்த நாளில் வணங்குவது மிகவும் விசேஷமானது.
மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சிவன் கோயிலுக்கு சென்று பிரதோஷ தினத்தில் நந்தி மற்றும் சிவபெருமானை வணங்க வேண்டும். குறித்த நேரத்தில் பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில், கலந்து கொள்ள வேண்டும். சிவனுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய தயிர், பால், இளநீர், சந்தனம் போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம்.
பலன்கள்
இந்த பிரதோஷ நாளில் விரதம் மேற்கொண்டால் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாத மற்றும் கன்னி கழியாத நபர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.
கடன் பிரச்சனைகள் குறைந்து, தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.