அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
Parvathamalai Hills: பர்வதமலை புதிய விதிமுறைகள்.. மலையேற்ற பிரியர்களே குறிச்சிவச்சிக்கோங்க.. லிஸ்ட் இதோ.!
மலையேற்றம் மற்றும் ஆன்மீக விஷயங்களுக்கு பிரபலமான பர்வதமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலை ஆன்மீக பக்தர்களுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் பிடித்தமான இடம் ஆகும். இங்குள்ள சிவன் கோவிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதை பலரும் வாடிக்கையான நிகழ்வாக கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாகவே பர்வதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இதனால் விபத்துகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ளன. வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பான விஷயத்தை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அறிவுறுத்தலாக வெளியிட்டு இருக்கின்றனர். அதன் விபரங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: விடுமுறை அறிவிப்பு... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

பர்வதமலை புதிய விதிமுறை அறிவிப்புகள்:
* பர்வதமலை வரும் பக்தர்கள் இனி அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். எந்த நேரத்திலும் மலையேறும் பாதை மூடப்பட்டு இருக்கும். இரவு நேரத்தில்
* 18 வயதுக்கு கீழுள்ள சிறார்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மலையேற்றம் செய்ய அனுமதி கிடையாது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், கடுமையான உடல்நலப்பிரச்சனை உடையவர்களுக்கும் அனுமதி இல்லை.

* அதேநேரத்தில், மலையேற்றம் செய்ய ஒரு மணிநேரத்துக்கு 100 பேர் வீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 200 பேருக்கும், இதர மாவட்டங்களை சேர்ந்தோர் 800 பேருக்கும் மலையேற அனுமதி வழங்கப்படும். அனுமதியை இணையவழியில் விண்ணப்பித்து பெறவேண்டும்.