வீட்டில் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டுமா? இதனை தினந்தோறும் கடைப்பிடியுங்கள்.!how-to-get-money-and-happiness-in-home

வீட்டில் செல்வ செழிப்புடன், ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நம்முடைய தினம்தோறும் சிலவற்றை கடைப்பிடித்தாலே போதும். அதன்படி வீட்டில் நேர்மறை எண்ணங்கள் கூடிய செயல்களை அதிகளவில் செய்ய வேண்டும்.

அதன்படி வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் சாமி சிலை அல்லது படங்களுக்கு பூ வைத்து வணங்க வேண்டும்.

money

பூஜை அறையில் வாசனை திரவியங்களை வைப்பதன் மூலமாக தெய்வீக மனம் வீசுவதோடு நமக்கு நேர்மறையான எண்ணங்கள் கிடைக்கும். இது நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்க உதவும்.

அதேபோல் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து தினம் தோறும் பூஜை செய்ய வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் உங்களது உள்ளங்கைகள், உங்கள் முகம் அல்லது குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும்.

money

குறிப்பாக கடவுளுக்கு பூஜை செய்யும் போது வாழை இலையில் மட்டும் தான் படைக்க வேண்டும். தினமும் வீட்டில் காலை, மாலை என இரு வேலைகளிலும் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

அதேபோல் பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்க கூடாது. அது தானாக அணைந்தால் தான் நல்லது. குறிப்பாக தினமும் ஒரு ஐந்து நிமிடங்கள் ஆவது கடவுளை நினைத்து வணங்க வேண்டும்.