புண்ணியம் தரும் சர்வ ஏகாதசி விரதம்.. இன்று தவறவிடாதீங்க.!



ekadashi-significance-spiritual-importance-of-fasting-o

ஏகாதசியில் விரதம் இருப்போர் மனதில் இருப்பது நினைக்கும் என்பதால், ஆன்மீக பக்தர்கள் ஏகாதசியை தவறவிடாமல் விரதம் இருக்கவும்.

சர்வ ஏகாதசி விரதம்:

Ekadasi Vratham: ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடையலாம் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைப்பிடிக்கும் இந்த விரதம், மனிதனை போக நிலைமையிலிருந்து யோக நிலைக்கு உயர்த்தும். மாசி மாதத்தின் தொடக்கத்தில், அதாவது இன்று (பிப்.13) ஏகாதசி வருவது சிறப்புக்குரியது.

இதையும் படிங்க: பெண்களே..... கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் தீபம் ஏற்றிய பிறகு இதை மட்டும் செய்யாத்தீங்க! முழு விபரம் இதோ...!

பெருமாளை வணங்கலாம்:

பகவத்கீதையை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசித்ததும் ஏகாதசி தினத்தில்தான் என நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து, துளசி மாலை சாற்றி மகாவிஷ்ணுவை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். இல்லத்தில் விளக்கேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி பெருமாளை நினைத்து வழிபட்டால் துன்பங்கள் விலகி நல்வாழ்வு மலரும் என்பது ஐதீகம்.

Spiritual Tips

தனித்துவமான மகத்துவம்:

பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி போன்ற பல விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்திற்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. புராணக் கதைகளின் படி, திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது ஏகாதசி நாளில், மறுநாள் துவாதசி அன்று அந்த அமிர்தம் தேவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாகவே ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கோபம், பொறாமை அகற்றும்:

இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், நோயற்ற உடல், குறைவற்ற செல்வம், நல்ல சந்ததி மற்றும் நிலைத்த புகழ் ஆகியவற்றை இறைவன் அருள்வார். மேலும், ஏகாதசி உபவாசம் கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை அகற்றி, மனதை தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகளை முடித்து மகாவிஷ்ணுவை மனதார வழிபட வேண்டும். முழு விரதம் இருப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. உடல்நலக் குறைவு உள்ளவர்கள் உங்கள் மனதில் விஷ்ணுவை நிலைநிறுத்தி விரதத்தை தவிர்க்கலாம்.