AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
பெண்களே..... கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் தீபம் ஏற்றிய பிறகு இதை மட்டும் செய்யாத்தீங்க! முழு விபரம் இதோ...!
தமிழகத்தின் முக்கிய ஆன்மீக விழாக்களில் ஒன்றான திருகார்த்திகை தீபம் இந்த ஆண்டு மிகுந்த பக்திபூர்வமான சூழலில் கொண்டாட உள்ளது. மாநிலம் முழுவதும் வீடுகள், கோயில்கள், தெருக்கள் தீபஒளியால் ஒளிரத் தயாராகி வருகின்றன.
திருவண்ணாமலை மகத் தீபத் திருவிழா
2025 டிசம்பர் 3 அன்று நடைபெறும் திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகர் தீபம் ஏற்றும் வழக்கம் தொடர்கிறது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கிச் சென்று வருகின்றனர். பக்தர்கள் பெருமளவில் வருவதால் அரசு சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டில் தீபம் ஏற்றும் ஆன்மீக பலன்கள்
திருவண்ணாமலையில் செல்ல முடியாதவர்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் முழு பலனைப் பெறலாம் என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய நம்பிக்கையின் படி, வீட்டில் தீபம் ஏற்றுவதால் செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
திருக்கார்த்திகையின் ஆன்மீக சிறப்புகள்
இந்த புனித நாளில் வீடுகளில் விளக்கேற்றும் போது துன்பங்கள் நீங்கி, தடைகள் அகன்று, நல்ல செய்திகள் வருமென்பது பக்தர்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. மாலை நேரத்தில் தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவது சிறப்பு பலனை தரும் என கூறப்படுகிறது.
தீபம் ஏற்றிய பின் தவிர்க்க வேண்டியவை
ஆன்மீக நம்பிக்கைகளின் படி, வீட்டில் தீபம் ஏற்றிய பிறகு வீட்டை பூட்டி வெளியே போகக்கூடாது. மேலும் பால், அரிசி, பருப்பு, எண்ணெய், மஞ்சள், வெல்லம் போன்ற பொருட்களை அன்று சில்லறை கடைகளில் வாங்கக்கூடாது. கடன் வாங்கி பொருட்கள் கொள்வனவு செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும். இவை அனைத்தும் பலன் குறைவதற்கு காரணமாகக் கருதப்படுகின்றன.
தீபம் ஏற்றும் முக்கிய வழிமுறைகள்
வீட்டின் எந்த அறையும் இருட்டாக இருக்கக்கூடாது; குறைந்தது ஒரு தீபம் இரவு முழுவதும் எரிய வேண்டும். வீட்டில் பெண்களே தீபம் ஏற்றுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. வீடு முழுவதும் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். வீட்டின் வாசலில் தீபம் ஏற்றுவது நன்மைகள் வீட்டிற்குள் நுழையும் எனும் பாரம்பரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
முருகப்பெருமானுடன் கார்த்திகையின் தொடர்பு
சரவணப் பொய்கையில் கார்த்திகைகள் முருகனை வளர்த்ததால் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த தினத்தில் முருகன் வழிபாடு சிறப்பு பலனை வழங்கும். தீபம் ஏற்றி முருகனை வணங்கினால், வாழ்க்கையில் தடைகள் அகன்று ஆயுள், ஆரோக்கியம், செல்வம், சுபீட்சம் பெருகும் என நம்பப்படுகிறது.
திருகார்த்திகை தீபத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நேர்மறை சக்தியையும் தரும் பண்டிகையாக திகழ்கிறது.