தெய்வ சக்திகளை ஈர்த்து, வீட்டை தெய்வாம்சமாக வைத்துக்கொள்ள உதவும் 3 பொருட்கள்!!
ஆன்மீக பொருட்களில் சில பொருட்கள் வாசனையுடன் சேர்த்து தெய்வ சக்திகளையும் தன்னகத்தே ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ளது.. அதில் புனுகு, அரகஜா மற்றும் ஜவ்வாது அத்தர் ஆகிய மூன்று பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாம்.
1. புனுகு
மிக வாசனையும், விலையும் உயர்ந்த இந்த புனுகானது ஒருவகையான பூனையிடம் இருந்து எடுக்கப்படுகின்றது.
வீட்டில் பூஜையறையினை வாசனையால் நிறைக்கும் இந்த ஆன்மிக பொருளானது கோவிலில் சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுகின்றது.
சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் இந்த புனுகு என்ற ஆன்மிக பொருள் வீட்டையும் இறைசக்திகளை ஈர்க்கும் இடமாக மாற்றும் தன்மையை கொண்டுள்ளது.
புனுகுடன் கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற வஸ்துக்களை மஞ்சள் நிற பையில் சேர்த்து பணத்தை அதில் வைத்துக் கொள்ள வீண் பண விரையத்தை குறைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
2. அரகஜா
பார்ப்பதற்கு மைபோல இருக்கும் இந்த அரகஜாவை நெற்றியில் இட்டுக்கொள்ளவும், கோவில்களில் பூஜைகளுக்கும் உரிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
குலதெய்வ அருளை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட அற்புத பொருள் என்றால் அதற்கு உதாரணமாக இந்த அரகஜாவை சொல்லலாம்.
ஒவ்வொருவருடைய வீட்டிலும் குலதெய்வத்தின் அருளும், பாதுகாப்பும் எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் நினைவினை நிஜமாக்க இந்த அரகஜா உதவும்.
3. அத்தர் ஜவ்வாது
சந்தனம் போலவே தூளாக இருக்கும் அத்தர் ஜவ்வாதானது மகா லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பொருளாகும்.
மிகவும் நறுமணம் நிறைந்த திரவியமான அத்தரை நாம் பூஜைக்கு பயன்படுத்தலாம். அத்தர் ஜவ்வாது மனதிற்கு நல்ல அமைதி கொடுக்கும் தன்மையை கொண்டது.
இந்த அத்தரை வீட்டு பூஜைகளில் பயன்படுத்தி, நாம் வீட்டை தெய்வாம்சம் நிறைந்த இடமாக மாற்றி இறைசக்திகளை ஈர்த்து செல்வ வளத்தையும், லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம்.