நான்கு வயதில் மீண்டும் ஒரு சச்சின் டெண்டுல்கர்! வியக்கவைக்கும் வைரல் வீடியோ!

young boy playing like sachin


young boy playing like sachin


இந்திய அணியின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் விளையாட்டிற்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கிரிக்கெட் என்றாலே சாப்பாட்டை கூட மறந்துவிடுவார்கள்.

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்போவான் சச்சின் டெண்டுல்கருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். சச்சினை கிரிக்கெட் கடவுள் என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் புகழாரம் செய்கின்றனர்.

இந்தநிலையில் சச்சினுடைய ஸ்டைலில் நான்கு வயது சிறுவன் ஒருவன், சச்சினை போலவே பிரமாதமாக விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வீடியோவை பார்த்தவர்கள் மீண்டும் ஒரு சச்சின் இந்திய அணிக்கு கிடைக்கவுள்ளார் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.