உலகம் விளையாட்டு

பிரபல WWE வீராங்கனை திடீர் மரணம்; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

Summary:

WWE - america - ashley massaro - death - fans sad

பிரபல WWE (World Wrestling Entertainment) வீராங்கனை ஆஷ்லே மாஸரோ திடீரென மரணம் அடைந்ததால் அவரது ரசிகர்கள் உட்பட WWE உலக ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

கிரிக்கெட் இந்தியாவின் மதம் என்றால் அமெரிக்காவின் மதம் WWE என்று கூறலாம். அந்த அளவிற்கு அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக திகழ்வது WWE . அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவிலும் இவ்விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். 

அதில் இடம்பெறும் ராக், ஜான் சீனா, கேயீன், HHH உள்ளிட்டோரை அறிந்திராத இளசுகள் இல்லை என்று சொல்லலாம். இந்தியாவில் இருந்தும் கூட கணிசமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அதில் மிகவும் பிரபலமானவர்கள் கிரேட் காளி, கவிதா தேவி போன்றோர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த WWE போட்டியில் விளையாடி புகழ் பெற்ற வீராங்கனை ஆஷ்லே மாஸரோ. ஆஷ்லே மாஸரோ தனது 25 வயதில் WWE போட்டியில் பங்கேற்க தொடங்கினார். இவர் தனது இளம் வயதில் அதாவது 40 வயதை எட்ட இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.  

கடந்த 16ம் தேதி ஆஷ்லே மாஸரோ லாங்க் தீவில் உள்ள வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவர் யாரேனும் கொலை செய்திருப்பார்களா என போலீஸார் வீசாரித்ததில் யாரும் அவரை கொலை செய்யவில்லை இயற்கையாகவே உடல்நல பிரச்னையால் இறந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement