இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்த அணி தான் வெல்லும்! பிரபல கிரிக்கெட் வீரர் கணிப்பு!

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்த அணி தான் வெல்லும்! பிரபல கிரிக்கெட் வீரர் கணிப்பு!


world cup final winner


கடந்த மே மாதம் தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற யுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணிலேயே ஆட இருப்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் லீக் தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எளிதில் வென்றதால் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

worldcup 2019

இந்தநிலையில் இன்றைய போட்டி குறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங், "இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். 

உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் கூறுகையில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினம் என்றும், அந்த அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு என கூறியிருந்தேன். தற்போதும் அதே நிலைதான் ஏற்படும் இன்றைய ஆட்டத்தில். மேலும் ,நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.