உலகம் விளையாட்டு

மீண்டும் வந்த ஸ்டீவ் ஸ்மித் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.!

Summary:

world cup 2019 - warmup - aus vs england - smith 116

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.  இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 297 ரன்களை குவித்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் தடை நீங்கிய பிறகு ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 116 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். டேவிட் வார்னர் 43 ரன்கள் எடுத்தார். மீண்டும் அணிக்குத் திரும்பிய இருவரும் தங்களது பழைய பார்முக்கு திரும்பியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் வின்ஸ் 64 , ஜோஸ் பட்லர் 52 , கிறிஸ் வோக்ஸ் 40 ரன்கள் எடுத்தனர்.


Advertisement