இந்தியா விளையாட்டு

உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா; நாளை நியூசிலாந்துடன் மோதல்.!

Summary:

world cup 2019 - training cricket - india vs newziland

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் பங்கேற்க உள்ளது.

மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்க உள்ளன.

இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (மே 25) பிற்பகல் 3 மணிக்கும், மே 28ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.


Advertisement