விளையாட்டு

இன்று, இந்தியா வென்றால் உலகக்கோப்பை உறுதிதா போல; ஏன்னா ராசி அப்படி.!

Summary:

world cup 2019 - today 1st match india vs south africa

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதற்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதேவேளையில் உலக கோப்பை தொடரில் முதல் போட்டியை ஆடும் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று வெற்றியுடன் மற்ற போட்டிகளை எதிர்கொள்ளும் உத்தேசத்துடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்திய அணி இதுவரை 11 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் இந்திய அணி முதல் முறையாக கடந்த 1983ல் தான் தான் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை துவங்கியதோடு, கோப்பை வென்று சாதித்தது. 

அதே போல கடந்த 2011ல் இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது. அதே நேரம் ஒட்டு மொத்தமாக உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பெரும்பாலும் தோல்வியுடனே துவங்கியுள்ளது. 11 துவக்க போட்டிகளில், இந்திய அணி 6 முறை தோல்வியுடனும், 5 முறை வெற்றியுடன் துவங்கியுள்ளது. 

அதே போல இங்கிலாந்து மண்ணில் இதுவரை 4 முறை (1975, 1979, 1983, 1999) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி ஒரே ஒருமுறை (1983) மட்டும் தனது உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் முதல் போட்டியின் முடிவுகள்: 

1975- 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (எதிர்- இங்கிலாந்து). - குரூப் பிரிவில் இந்திய அணி வெளியேறியது. 

1979 - 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (எதிர்- விண்டீஸ்). - குரூப் பிரிவில் இந்திய அணி வெளியேறியது. 

1983 - 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (எதிர்- விண்டீஸ்) - உலகக்கோப்பை சாம்பியன். 

1999 - 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (எதிர்- தென் ஆப்ரிக்கா). - சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி வெளியேறியது.  

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த் 1983 போல இம்முறையும் உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கும் பட்சத்தில் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து  விளையாடிய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement