டிவிலியர்ஸுக்கு நாட்டை விட பணம்தான் முக்கியம் போல; பாகிஸ்தான் முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு.!

world cup 2019 - south africa - ab diviliers - sohaip akthar


world-cup-2019---south-africa---ab-diviliers---sohaip-a

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியுற்று ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி இதுபோல தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.

போதாதகுறைக்கு அந்த அணியின் முன்னணி அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தோல்பட்டை காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் உலக கோப்பை தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த டிவிலியர்ஸ் உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

World cup 2019

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டிவிலியர்ஸை சாடி அதிரடியாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்: உலகக் கோப்பை தொடருக்கு தயாராகத்தான் டிவிலியர்ஸை ஐபிஎல், பி.எஸ்.எல்  தொடர்களில் இருந்து விலகுமாறு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுத்தது.  ஆனால் இதனை தவிர்ப்பதற்காகவே அவர் விரைந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

World cup 2019

அவர் தனது நாட்டின் பக்கம் இல்லாமல் பணத்தை தேர்வு செய்தார். அவர் ஓய்வு அறிவிக்கும்போது தென்ஆப்பிரிக்கா அணி பலவீனமாகத்தான் இருந்தது. உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவர் தனது ஓய்வு முடிவை பரிசீலித்திருக்க வேண்டும். மீண்டும் உலக கோப்பைக்காக அணிக்கு திரும்ப விரும்புகிறேன் என்று கூறுவது வருத்தமளிக்கிறது.

World cup 2019

எனக்கும் இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் பணத்தை பார்க்கவில்லை. நாட்டிற்காக ஆட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. டிவிலியர்ஸ் அவ்வாறு செய்யவில்லை அவர் ஆடியிருந்தால் மோசமான தோல்விகளை தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.