விளையாட்டு

ஆரம்பமே அதிர்ச்சி! மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்; ராட்சசன் கிறிஸ் கெயில் படைத்த புதிய சாதனை.!

Summary:

world cup 2019 - pakistan vs westindies - gayle record

இங்கிலாந்தில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நாட்டிங்காமில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர், தாமஸ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது மகா மட்டமான ஸ்கோரை பதிவு செய்தது.

 

பாகிஸ்தான் அணியின் பக்கர் ஷமாம் மற்றும் பாபர் ஷமாம் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிமை கேட்ச் பிடித்த அவுட்டாக்கிய விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், விண்டீஸ் அணிக்காக பீல்டராக அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் கார்ல் கூப்பரின் சாதனையை சமன் செய்தார்.

ஒருநாள் அரங்கில் விண்டீஸ் அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியல்: 
120 கார்ல் கூப்பர் / கிறிஸ் கெயில் 
117 பிரைன் லாரா 
100 விவ் ரிச்சர்ட்ஸ் 
75 ரிச்சி ரிச்சர்ட்சன் 


Advertisement