இந்தியா விளையாட்டு

ஷேவாக் வெளியிட்டுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணி; யார் யார் தெரியுமா?

Summary:

world cup 2019 - indian team - virendira shewaugh

2019 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய அணி தனது வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு வகையான யோசனைகள் பலதரப்பில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. 

குறிப்பாக 4,5,6 ஆம் இடங்களில் இறங்கும் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த இடங்களுக்கு தோனி, ரஹானே, ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் என ஒரு நீண்ட பட்டியலே இருந்து வருகிறது.

இந்நிலையில், விரேந்திர சேவாக் தனது கனவு அணியை அறிவித்ததோடு, 2015ம் ஆண்டு உலகக் கோப்பை விளையாட சென்ற இந்திய அணியையும், தனது 2019 உலகக் கோப்பை இந்திய கனவு அணியையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். தனது 15 கொண்ட இந்திய கனவு அணியில் 2015ம் ஆண்டு விளையாட சென்ற 7 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 8 புதிய வீரர்களை அவரின் கனவு அணி பட்டியலில் சேர்த்துள்ளார்.

கனவு அணி விபரம்:
விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, கேதார் ஜாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், விஜய் சங்கர், பும்ரா, ரிஷப் பண்ட.   


Advertisement