
world cup 2019 - india vs pakistan match
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 16ம் தேதி கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐசிசி உலக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் முதல் சுற்றில் எதிர்கொள்ளும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தனிப்பட்ட அணி வென்றுள்ளதை விட மழை தான் அதிகமுறை வென்றுள்ளது என கூற வேண்டும். இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன.
இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அணிகளில் புள்ளிப்பட்டியலை நிர்ணயிப்பதில் மழையின் பங்கு அதிகமாகவே உள்ளது. எனவே எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதனை கணிப்பதில் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி
கூறும்போது: ‘சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணி போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டி இந்திய வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும்.
கடந்த உலகக்கோப்பை தொடரைப் போலவே இந்த முறையும் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெறும். தவான் இரண்டு வாரத்துக்கு ஓய்வில் தான் இருப்பார். அரையிறுதிக்குள் தவான் முழுமையாக குணமடைந்து விடுவார் என நினைக்கிறேன். என்றார்.
Advertisement
Advertisement