இன்றைய போட்டியில் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இன்றைய போட்டியில் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!



world-cup-2019---india-vs-pakistan---today-match

உலகக்கோப்பை போட்டி தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள புதிய உத்வேகத்தில் உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தனிப்பட்ட அணி வென்றுள்ளதை விட மழை தான் அதிகமுறை வென்றுள்ளது என கூற வேண்டும்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அணிகளில் புள்ளிப்பட்டியலை நிர்ணயிப்பதில் மழையின் பங்கு அதிகமாகவே உள்ளது.

World cup 2019

எனவே எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதனை கணிப்பதில் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இன்று நடைபெறும் ஆட்டத்திலும் மதியம் சிறிது நேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆனால் தொடர் மழை பெய்து ஆட்டம் தடைபட வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

இன்று, கேப்டன் கோலி வழக்கமான பார்மை தொடர்ந்தால் சிறந்தது. நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் துவக்க வீரராக செல்வதால் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் யாராவது ஒருவர் வாய்ப்பு பெறலாம். தோனி, பாண்ட்யா, தங்களின் சிறப்பான பினிஷிங்கை தொடர வேண்டும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா மீண்டும் அசத்தலாம். சுழலில் சகால் இடம் உறுதி. ஆனால் குல்தீப்பிற்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெறுவார் என தெரிகிறது.

World cup 2019

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் மிகவும் குழப்பமான அணியாக உள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 105 ரன்கள் மட்டுமே எடுத்து உலகக்கோப்பையில் இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்ததது. அடுத்த போட்டியில் தங்களின் இரண்டாவது அதிக ஸ்கோரை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பியது. 

உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது. பவுலிங்கில் முகமது ஆமிர் மிரட்ட காத்திருக்கிறார். இவருடன் வகாப் ரியாஸ் கைகோர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு தொல்லை தான். அப்ரிதி, ஹசன் அலியும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக அமையலாம். 

World cup 2019

ஒருநாள் அரங்கில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 131 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 54 முறையும், பாகிஸ்தான் 73 முறையும் வென்றுள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதிய 6 போட்டிகளிலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.