கிறிஸ் கெயில் நோ-பால் விவகாரம்: நடுவர்களை விமர்சிக்கும் முன் கவனம் தேவை; ஐசிசி எச்சரிக்கை.!

world cup 2019 - chris gayle out - commenders - icc


world cup 2019 - chris gayle out - commenders - icc

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 10வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை அடுத்ததடுத்த பந்தில் அம்பயர் அவுட் கொடுத்தார். இதை இரண்டு முறையும் கிறிஸ் கெயில் ரிவியூ செய்ய, ரீப்ளேவில் அவுட் இல்லை என தெரிந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய போட்டியின் 5வது ஓவரில் 5வது பந்தில் கெயிலுக்கு அம்பயர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் இதற்கு முதல் பந்தை (4வது பந்தை) ஸ்டார்க், மிகப்பெரிய ‘நோ-பாலாக’ வீசினார்.

World cup 2019

ஆனால் இதை அம்பயர் கவனிக்க தவறினார். கிரிக்கெட்டில் புதிய விதியின் படி ஒரு பந்தை பவுலர் ‘நோ -பாலாக’ வீசினால், அடுத்த பந்து ஃப்ரி ஹிட்டாக அறிவிக்கப்படும். அதில் பேட்ஸ்மேன் ரன் அவுட் தவிர, வேறு எப்படி அவுட்டானாலும் , அவுட் இல்லை. ஆனால் கிறிஸ் கெயில் பரிதாபமாக வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்விக்கு இந்நிகழ்வு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

இப்போட்டியில் ஒரு முறை இரு முறை அல்ல, கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் அம்பயர் முடிவு தவறாக அமைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டர், ப்ராத்வொயிட் ஆகியோர் இது குறித்து கடுமையான விமர்சனம் செய்திருந்தனர். மேலும் இப்போட்டியில் வர்ணனையாளராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோலிடிங் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என நேரலையாகவே தெரிவித்தார்.

World cup 2019

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு ஐசிசி அதிரடியாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் போட்டியின் போது நடுவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் முன் கவனம் தேவை என எச்சரிக்கை விடுத்துள்ளது தெரிகிறது.