வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
உலக கோப்பைக்காக இந்திய வீரர் எடுத்துள்ள அதிரடி முடிவு; குவியும் பாராட்டு.!
உலகக் கோப்பை போட்டி தொடருக்கு தன்னை தயார் படுத்தும் விதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டித் தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணியினரும் தங்களது வீரர்களை தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி யார் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் பொருட்டும், பயிற்சி எடுப்பதற்கும், உடல் நலனை கவனித்து கொள்வதற்கும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் விளையாடப் போவதாகவும், அடுத்த பாதியில் விளையாடாமல், உலகக் கோப்பைக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தன்னுடைய நிலை இப்படி தான் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வலர்களும் புவனேஷ்குமாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரைப் போன்று மற்ற வீரர்களும் இந்த முடிவினை எடுக்க முன்வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.