பெண்கள் ஐ.பி.எல் தொடர்... மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி; கோப்பையை தட்டிச்சென்று கொண்டாட்டம்.!
ஐ.பி.எல் தொடரில் பெண்களுக்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி அடைந்தது.
கடந்த 4 ம் தேதி மகளிருக்கான முதல் இந்திய பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் கலந்துகொண்டன.
போட்டியில் ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் முன்னேறியது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறிய நிலையில், எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி அடைந்து இறுதிப்போட்டிக்கு சென்றது.

நேற்று இரண்டு அணிகளும் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து மகளிர் பிரீமியர் லீக் கோப்பைக்கான மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தன.
இதனால் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரங்களில் ஆட்டம் இழந்தாலும் ஷிவர் பிராண்ட் - ஹர்மன் பிரீத்தி ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் 19.3 ஓவரில் இலக்கை எட்டிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பில் வெற்றிக்கோப்பையை பெற்றது. இதனால் முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிவாகை சூடியது.