விளையாட்டு

இந்த ஆண்டு ஐபில் கோப்பை இந்த அணிக்குத்தான்!! அதுக்கு காரணமும் இருக்கு!! அடித்து கூறும் பிரபல வீரர்..

Summary:

இந்தமுறை ஐபில் கோப்பை இந்த அன்னிக்குத்தான் என அடித்துக்கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்ன

இந்தமுறை ஐபில் கோப்பை இந்த அன்னிக்குத்தான் என அடித்துக்கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேனியல் கிரிஸ்டியன்.

ஐபில் T20 சீசன் 14 இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் இந்தமுறை கோப்பையை கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து அணிகளும் களமிறங்க உள்ளது. இதுஒருபுரம் இருக்க, இந்த முறை நிச்சயம் ஐபில் கோப்பையை வெல்லப்போவது விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணிதான் என அடித்து கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பெங்களூரு அணி வீரருமான டேனியல் கிரிஸ்டியன்.

விராட்கோலி தற்போது நல்ல பார்மில் இருப்பதாலும், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பதாலும் இந்த முறை பெங்களூரு அணிதான் கோப்பையை வெல்லும் என கூறுகிறார் டேனியல் கிரிஸ்டியன். நிச்சயமாக ஆர்சிபி அணி அனைத்து அணிகளையும் எளிதாக வென்று விடும்.மேலும் பல இளம் வீரர்கள் இருக்கையில் நிச்சயம் இந்த ஆண்டு கோப்பை ஆர்சிபி அணிக்கே என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட ஐபில் கோப்பையை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது.


Advertisement