டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு நேரடியாக சென்ற இந்திய மகளிர் அணி! அவர்களை எதிர்த்து ஆடப்போவது யார்? - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு நேரடியாக சென்ற இந்திய மகளிர் அணி! அவர்களை எதிர்த்து ஆடப்போவது யார்?

2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மழையால் தடைபட்ட நிலையில், இந்திய மகளிர் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்தநிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை. இதனால்,  ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

இதனையடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அந்தப் போட்டியும் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியும் மழையால் நின்றாள் தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo