19 ஆவது ஓவரில் சீறிய தோனி கடைசியில் என்ன கூறினார் தெரியுமா- தீபக் சாகர் ஓபன் டாக்
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேலையில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் கடந்த சனிக்கிழமை மோதின. 18 வது போட்டியான இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின்னர் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
161 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் 19 வது ஓவரை வீசிய சென்னை அணியின் வீரர் தீபக் சாகர் அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை தொடர்ந்து நோ பாலாக வீசினார். இதனால் Mr . கூல் என அழைக்கப்படும் சென்னை அணியின் கேப்டன் தோனி பயங்கர கோபமானதை பார்க்க முடிந்தது.
முதல் பந்திலேயே 9 ரன்களை விட்டுக்கொடுத்த சாகர் ஒருவழியாக மீதமுள்ள பந்துகளை சிறப்பாக வீசி அந்த ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும் கடைசி பந்தில் டேவிட் மில்லரை போல்டாக்கினார். பின்னர் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.
MS Dhoni schooling Deepak Chahar for his back to back no balls #CSKvKXIP #IPL2019 pic.twitter.com/iRhGQ62gib
— Deepak Raj Verma (@DeVeDeTr) April 6, 2019
இந்நிலையில், 19வது ஓவரில் என்ன நடந்தது, போட்டியை வென்ற பின் தோனி என்ன கூறினார் என சாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சாகர், "அந்த சமயத்தில் தோனி மிகவும் கோபமாக இருந்தார். அவர் பல விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என் மனதில் அடுத்து எந்த மாதிரியான பந்து வீச வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே ஓடியது. ஒருவழியாக அதன் பின்பு அந்த ஓவரை சிறப்பாக வீசி முடித்தேன்.
மேலும், ஆட்டம் முடிந்த பின்னர் அனைத்து வீரர்களும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடைசி ஓவரை சிறப்பாக வீசியதாக கூறினர். கேப்டன் தோனியும் சிரித்துக்கொண்டே வந்து கட்டித் தழுதி சிறப்பாக பந்து வீசியதாக கூறினார். மேலும் வரும் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார்" இவ்வாறு சாகர் கூறியுள்ளார்.