உலகம் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளருக்கு தடை; ஐசிசி திடீர் அறிவிப்பு; அதிர்ச்சியில் அணி வீரர்கள்.!!

Summary:

west indies cricket coach stuart law

ஐசிசி கிரிக்கெட் விதிகளை மீறியதால் இந்தியாவுக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளிலிருந்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டூவர்ட் லா வை நீக்கி ஐசிசி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுவரை பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் அபராதம், தடை விதிக்கப்பட்டிருக்கும் இருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்களுக்கு உள்ள விதிமுறைகள் போல பயிற்சியாளர்களுக்கும் உண்டு என்று விளக்கம் அளித்துள்ளது ஐசிசி. 

Image result for west indies cricket coach

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் 3 ஆம் நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிரண் பவுலுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது என்று கோபமடைந்த ஸ்டூவர்ட் லா டிவி நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து நான்காவது நடுவரிடமும் பிரச்சினை செய்ய முயன்றுள்ளார்.

இதனால், இவர் மீது  குற்றம் சாட்டப்பட்டு ஐசிசியின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதன் படி ஐசிசி இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Related image

இதன் படி 24 மாதங்களில் 3 அபராத புள்ளி பெறும் வீரர் / பயிற்சியாளர் அடுத்து வரும் 2 ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது என்ற விதி உள்ளது. ஏற்கனவே 2017 மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஒரு அபராத புள்ளி, 25% போட்டி சம்பளம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2 அபராத புள்ளி  விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement