இந்தியா விளையாட்டு

உலககோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க நாங்கள் தயார்! ரவிசாஸ்திரி அதிரடி கருத்து

Summary:

we are ready to give up worldcup tournament

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூன் 16-ம் தேதி நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இருநாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்னை காரணமாகப் பதற்றமான சூழல் நிலவிவருவதால், கடந்த 2012-13-க்குப் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தான் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு, பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக, உலகக்கோப்பை தொடரில் அந்நாட்டுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்துவருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ``அந்த முடிவு பிசிசிஐ மற்றும் அரசின் கைகளில் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு எடுப்பார்கள்’’ என்று தெரிவித்தார். இந்திய அணி, உலககக்கோப்பை தொடரையே புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு, `உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டாம் என்று அரசு கூறும் நிலையில், அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்று ரவி சாஸ்திரி பதிலளித்தார்.  


Advertisement