சிஎஸ்கேவின் முன்னனி வீரர் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் ரசிகர்கள்

சிஎஸ்கேவின் முன்னனி வீரர் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் ரசிகர்கள்


watson-announces-retirement-from-ipl

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்த ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் சொந்த நாட்டிற்கு திரும்பியதும் அணைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமானார். அதன் பின்னர் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வாட்சன் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார்.

shane watson

2018 மற்றும் 2019 ஆண்டு ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இறுதிப்போட்டி வரை போராடினார். 2018 ஆம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக ஷேன் வாட்சன் இருந்தார். 2019 ஆம் ஆண்டில் சென்னை அணி இறுதி போட்டியில் தோற்றாலும் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதை யாராலும் மறக்க முடியாது.

39 வயதான வாட்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு பார்மில் இல்லை. எனவே கடைசி போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார்.