பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிற்கு இப்படி ஒரு நிலைமையா! இங்கிலாந்தில் நடந்த சோக சம்பவம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிற்கு இப்படி ஒரு நிலைமையா! இங்கிலாந்தில் நடந்த சோக சம்பவம்


wasim-akram-in-manchester-airport-insulted

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத இடம் பிடித்தவர் வாசிம் அக்ரம். வேகப்பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த வாசிம் அக்ரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 414 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 502 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வாசிம் அக்ரம் தற்பொழுது வர்ணனையாளராக தனது பணியை செய்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி நிறைவு பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றினார் வாசிம் அக்ரம். அனைத்துப் பணிகளையும் முடித்து விட்டு இங்கிலாந்திலிருந்து தாய் நாட்டிற்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார் வாசிம் அக்ரம்.

wasim akram

இன்று மான்செஸ்டர் விமான நிலையத்திற்கு சென்ற வாசிம் அக்ரமுக்கு நடந்த கொடுமையை குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாசிம் அக்ரம் தானே செலுத்தி கொள்ளும் இன்சுலின் மருந்தினை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த காவலர்கள் அவரது கைப்பையில் இருந்த இன்சுலினை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக அதை தனியாக ஒரு கவரில் போட கூறியுள்ளனர்.

இதனால் மிகவும் மன வேதனையுற்ற வாசிம் அக்ரம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தான் ஒரு பிரபலம் என்பதால் தன்னை சோதனை செய்ததற்காக வருத்தப்படவில்லை. ஆனால் இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை கூட விமானத்தில் எடுத்துச்செல்ல அனுமதிக்காதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதனால் எத்தனையோ சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர் என்பதனை நினைத்து தான் வருத்தமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.