
Summary:
கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. விராட் கோலியும் அவரது மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
இந்தநிலையில் விராட் மனைவி அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகாப் பயிற்சி செய்ய, விராட்கோலி அவரின் காலை பிடித்துள்ளார். அந்தப் பதிவில் “ எனது வாழ்வில் யோகாவிற்கு முக்கியப்பங்கு உண்டு. நான் கர்ப்பம் தரிக்கும் முன்னர் எனது மருத்துவர் இது போன்ற கடினமான யோகா பயிற்சிகளை தந்தார். இந்தப் பயிற்சிகளுக்கு நிச்சயம் ஒருவரின் உதவித் தேவைப்படும்.
இந்த ஆசனத்தை நான் பல ஆண்டு காலமாக செய்து வருகிறேன். சுவரின் உதவியோடு இந்த ஆசனத்தை செய்த நான், கூடுதல் பாதுகாப்பிற்காக எனது கணவரின் உதவியுடன் செய்தேன். யோகாப் பயிற்சியை பிரசவ காலத்திலும் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் செய்யும் இந்த "சிரசாசனம்" ஆசனங்களில் கடினமான பயிற்சி என பதிவிட்டுள்ளார். தற்போது அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement