நேற்றைய ஆட்டத்தில் வெறித்தனமான ஆட்டம்.! புதிய சாதனை படைத்த விராட் கோலி.!

நேற்றைய ஆட்டத்தில் வெறித்தனமான ஆட்டம்.! புதிய சாதனை படைத்த விராட் கோலி.!



virat new record

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கி விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17.5 ஓவர்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

நேற்றய ஆட்டத்தில் 49 பந்துகளில் 73 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதுவரை 86 டி20 போட்டிகளில் விளாடியுள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.  

இந்தநிலையில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் 99 போட்டிகளில் 2839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.