விளையாட்டு

ரசிகர்களை கெட்ட வார்த்தையில் திட்டி, படு மோசமாக சைகை செய்த விராட்கோலி.! நியூசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

Virat kohli angry speech with reporters

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை தவிர அணைத்து போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி அடைந்து ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நியூசிலாந்து அணி கேப்டன் ஆட்டம் இழந்து வெளியேறும்போது வாயில் விரல் வைத்து அவரை வழியனுப்பியது, நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டியும், சைகை காட்டியும் மோசமாக நடந்து கொண்டார். மேலும், நியூசிலாந்து ரசிகர்கள் குடிகாரர்கள் என்பதுபோல் சைகை காட்டியும், மயங்கி கீழே விழுவது போலவும் நடித்து காண்பித்தார்.

அதுமட்டும் இல்லாமல், நியூசிலாந்து அணியின் மற்றொரு வீரர் ஆட்டம் இழந்த போது வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும் படியும், ஆங்கில கெட்ட வார்த்தையையும் கூறினார் விராட்கோலி.

இந்நிலையில், போட்டி முடிந்து நிருபர்களை விராட்கோலி சந்தித்தார். அந்த பேட்டியில், நீங்கள் வில்லியம்சனை திட்டியது, நியூசிலாந்து ரசிகர்களை திட்டியது இவை சரியா? ஒரு இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் களத்தில் சிறந்த உதாரணமாக நடந்து கொண்டிருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் கோபமடைந்த விராட்கோலி, என்ன நடந்தது என தெரிந்து கொண்டு, நல்ல கேள்விகளுடன் வாருங்கள். நீங்கள் என்ன நடந்தது என தெரியாமல், பாதி கேள்விகள், பாதி பதிலுடன் இங்கே வர வேண்டாம். அதே போல, சர்ச்சை கிளப்ப நினைத்தால், இது அதற்கான இடமல்ல. நான் ஏற்கனவே எனது செயல்பாடுகள் குறித்து மேட்ச் ரெப்ரியிடம் விளக்கி கூறிவிட்டேன், அவரும் நடந்தவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி விட்டார் என ஆக்ரோஷமாக பதில் கூறியுள்ளார் விராட்கோலி.


Advertisement