உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு! உற்சாகத்துடன் புகழ்ந்து தள்ளிய விராட் கோலி! யாரை? எதற்காக தெரியுமா?

உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு! உற்சாகத்துடன் புகழ்ந்து தள்ளிய விராட் கோலி! யாரை? எதற்காக தெரியுமா?



virat-kholi-wishes-to-women-cricket-team

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்தநிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால்,   ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   இதனையடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

cricket

இந்தநிலையில் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய -இந்திய அணிகள் மோதவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஆடவர்  அணித்தலைவர், விராட் கோலி இறுதிசுற்றை எட்டிய இந்திய மகளிர்  அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா மிக சிறப்பான  ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக காத்திருந்தபோதுமழை புகுந்து வீணாகிவிட்டது.. அடுத்த 8ஆம் தேதி நடக்கவிருக்கும்   இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.