அடேங்கப்பா! லண்டனில் விராட் கோலிக்கு கிடைத்த அங்கீகாரத்தை பாருங்கள்! ரசிகர்கள் உற்சாகம்

அடேங்கப்பா! லண்டனில் விராட் கோலிக்கு கிடைத்த அங்கீகாரத்தை பாருங்கள்! ரசிகர்கள் உற்சாகம்



virat-kholi-wax-statue-at-madame-tussauds

உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனிலுள்ள மேடம் துசாட்ஸ் என்ற மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் ஜூன் 5ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Virat Kohli

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது நன்கு அறிந்ததே. மேலும் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகள்கள் ஏராளமாக உள்ளனர்.

ரன் மெஷின் என பலரால் அழைக்கப்படும் விராட் கோலி உண்மையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார். 30 வயதாகும் கோலி 227 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10843 ரன்களும், 41 சதங்களும் அடித்துள்ளார். 49 சதங்கள் அடித்துள்ள சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.

Virat Kohli

இந்நிலையில் கோலியினை பெருமைப்படுத்தும் விதமாக லண்டனில் உள்ள மிகப்பெரிய மெழுகு அருங்காட்சியகமான மேடம் துசாட்ஸில் கோலிக்கு மெழுகு சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். நேற்று லாட்ஸ் மைதானத்தில் திறந்து வைக்கப்பட் இந்த சிலையானது வரும் ஜூலை 15 ஆம் தேதி பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்ப்டும்.


கோலியை நேரில் பார்ப்பது போன்றே இருக்கும் இந்த மெழுகு சிலைக்கு, கோலி தான் அணிந்து விளையாடிய இந்திய அணியின் உடை, ஷூ, பேட், க்ளவுஸ், பேட்ஸ் என அனைத்தையும் ஒரிஜினலாகவே தானமாக கொடுத்துள்ளார்.