குழப்பமான நேரத்தில் சரியான முடிவெடுத்த விராட்கோலி! அதுவே வெற்றிக்கு முக்கிய காரணம்!

குழப்பமான நேரத்தில் சரியான முடிவெடுத்த விராட்கோலி! அதுவே வெற்றிக்கு முக்கிய காரணம்!



Virat kholi timing decision helped India to won the match against to Australia

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 14 போட்டிகள் முடிந்துள்ள நிலையியல் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 36  ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 352 ரன் எடுத்தது. இந்திய அணி வீரர் தவான் அதிகபட்சமாக 117 ரன் எடுத்தார்.

World cup 2019353 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆத்ரேலியா அணி வீரர்கள் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். குறிப்பாக ஆத்ரேலியா அணி வீரர் ஸ்மித் சிறப்பாக ஆடி 70 பந்துகளில் 69 ரன் எடுத்தார். ஒருகட்டத்தில் மெக்ஸ்வெல்லுடன் கூட்டணி சேர்ந்த ஸ்மித் அதிரடியாக விளையாடி அணியின் எணிக்கையை மளமளவென உயர்த்தினார்.

World cup 2019

இப்படியே சென்றால் இந்திய அணி நிச்சயம் தோல்வியை தழுவும் என்ற நிலையில் 40 வது ஓவரை  புவனேஸ்வர் குமார் வீசினார். 40 வது ஓவரின் 4 வது பந்து ஸ்மித்தின் காலில்  பட்டது. இந்திய அணி வீரர்கள் விக்கெட் கேட்க, அது விக்கெட் இல்லை என நடுவர் மறுத்துவிட்டார்.

உடனே சுதாரித்துக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சற்றும் தாமதம் இல்லாமல் மூன்றாவது அம்பையரிடம் ரிவியூ கேட்டார். இறுதியில் ஸ்மித் LBW முறையில் ஆட்டம் இழந்தது உறுதி செய்யப்பட்டது. மிக சரியான நேரத்தில் ரிவியூ கேட்டு ஸ்மித்தை வெளியேற்றியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றே கூறலாம்.