விளையாட்டு

அனுஸ்கா பால் போட, விராட் பேட்டிங் செய்ய..! அடடே..! விராட்கோலி ஆடிய ஜாலி கிரிக்கெட்..! வைரல் வீடியோ..!

Summary:

Virat Kholi playing cricket with wife video goes viral

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது மனைவியுடன் வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். பெரும்பாலான தொழில்கள் கொரோனாவால் தடைபட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐபில் கிரிக்கெட் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் போன்றவையும் கொரோனாவால் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தனது வீட்டிலையே ஓய்வு எடுத்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, அவ்வப்போது தனது மனைவியும், நடிகையுமான அனுஸ்கா ஷர்மாவுடன் புகைப்படம், வீடியோ போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவந்தனர்.

தற்போது கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டின் வளாகத்திலையே கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட, தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement