இந்தியா விளையாட்டு

விராட் கோலி - பென் ஸ்டோக்ஸ் இடையே ஏற்பட்ட மோதல்.! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ.!

Summary:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. நேற்றைய

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் 14 ஆவது ஓவரில் சிராஜ் பந்து வீசினார். 

அப்போது சிராஜ் பந்தை பவுன்ஸராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை, ஸ்டோக்ஸ் ஏதோ தவறுதலாக பேசியுள்ளார் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஓவர் முடிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டோக்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


கடைசியில் நடுவர் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். எப்போவுமே எதாவது பிரச்னை என்றால் கோபத்துடன் சீறிப்பாயும் விராட் கோலி நேற்று இந்த பிரச்சனையை அருமையாகக் கையாண்டுள்ளார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement