இந்தியா விளையாட்டு

இன்றைய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்ட்டாக முறியடித்தார் விராட் கோலி!

Summary:

கேப்டன் கோலி அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகிறார் இந்திய அணியின் விராட் கோலி. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் கோலி அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார். விரைவாக 12 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 309 ஒருநாள் போட்டிகளில் (300 இன்னிங்ஸ்) விளையாடி 12,000 ரன்களை கடந்திருந்தார். விராட் கோலி இந்த இலக்கை 251-வது போட்டியில் (242 இன்னிங்ஸ்) எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement