பார்க்க தான் சிம்பிள்! ஆனால் பல கோடிகளுக்கு அதிபதி! நடிகர் விஜய் ஆண்டனி சொத்து மதிப்பு இவ்வளவா?



vijay-antony-net-worth-properties-update

பன்முகம் கொண்ட பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். 'சுக்கிரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், பின்னர் 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கினார். 'சலீம்', 'பிச்சைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களால் ரசிகர்களின் மனதை கைப்பற்றினார்.

விஜய் ஆண்டனி

அண்மையில், 'மார்கன்' என்ற திரைப்படத்தில், லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், மாயவன் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி

இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சென்னை நகரத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள பங்களா, பெங்களூரில் ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் பிஎம்டபில்யூ போன்ற சொகுசு கார்களுடன், அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 55 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சினிமாவாகிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை.! ஹீரோ இவரா.! வெளிவந்த போஸ்டர்!!

 

 

இதையும் படிங்க: மகாநதி சீரியல் நடிகை வைஷாலிக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு விழா ! பிரபலங்கள் வாழ்த்து கூறி என்ன பேசி உள்ளனர் பாருங்க! வைரலாகும் வீடியோ...